வைக்கப்பட்ட செக்கிலிருந்து மீண்டு வரத் திணறும் ரஜினி முருகன்??


வைக்கப்பட்ட செக்கிலிருந்து மீண்டு வரத் திணறும் ரஜினி முருகன்??

இந்த பொங்கல் யாருக்கு சர்க்கரையோ இருந்ததோ? இல்லையோ? ரஜினிமுருகன் குழுவுக்கு தித்திக்கும் அளவிற்கு இருந்து வருகிறது.

இப்படத்துடன் மூன்று படங்கள் வெளியானாலும் இப்படமே வசூல் மற்றும் விமர்சனங்களில் முன்னிலை வகிக்கிறது.

படம் வெளியாகி இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. இதுவரை வந்துள்ள தகவல்களின் படி தமிழகத்தில் மட்டும் ரூ. 24 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் படத்திற்கு ஏற்பட்டுள்ள வரவேற்புக்கு இந்த வசூல் சற்று குறைவே என தெரியவந்துள்ளது.

அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் படத்திற்கு எதிராக சில சிக்கல்கள் எழுந்ததே காரணம் என கூறப்படுகிறது.

காரணம், இப்படத்துடன் போட்டியாக முக்கிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் குறைவான தியேட்டர்களே ரஜினிமுருகன் படத்திற்கு கிடைத்ததாம். அதாவது தமிழகத்தில் மட்டும் 300 தியேட்டர்களே கிடைத்தன. மேலும் சில தியேட்டர்களில் ஒரு நாளைக்கு 2 காட்சிகளே கிடைத்திருக்கின்றன.

இவையில்லாமல் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட நெருக்கடியால் கடன்களை சரிக்கட்ட குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்களுக்கே மட்டுமே படம் கொடுக்கப்பட்டதாம்.

தற்போது படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துள்ளதால் நிறைய காட்சிகளும், தியேட்டர்களும் அதிகரிக்கப்படவுள்ளதாம்.

எனவே இனிவரும் நாட்களில் ரஜினிமுருகன் இன்னும் பல கோடிகளை வசூலிப்பான் என கோலிவுட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.