கொந்தளிக்கும் ரசிகர்கள்; சிக்கும் சிவகார்த்திகேயன்??


கொந்தளிக்கும் ரசிகர்கள்; சிக்கும் சிவகார்த்திகேயன்??

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’ரஜினி முருகன்’. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக லிங்குசாமி தயாரித்துள்ளார்.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினையல் படம் தாமதமானது. ஒருவழியாக பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இப்படம் டிச. 4ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்புகள் வந்தன. இப்படத்தின் தமிழக உரிமையை பெற்றிருக்கும் வேந்தர் மூவிஸ் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது.

இந்நிலையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் பெரும் தொகையை கொடுத்து ‘ரஜினிமுருகன்’ பிரச்சினையை தீர்க்க முன்வந்தது.

ஆனால் லிங்குசாமியின் கடன் பிரச்சினை மகா பெரிய “உத்தமவில்லங்கங்கள்” நிறைந்திருப்பதால் அதுவும் பின்வாங்கிவிட்டதாம். எனவே டிசம்பர் 4ஆம் தேதி ரஜினிமுருகன் வெளியாவது சந்தேகமே என்ற தகவல்கள் தற்போது வந்துள்ளன.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக ஸ்ருதிஹாசனே தெரிவித்துள்ளாராம். பிசி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ஸ்ருதி பற்றி தவறாகப் பேசியதால் கமல் ரசிகர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார் எனத் தகவல் பரவியது. சினிமாவில் எது வேணாலும் நடக்கலாம் என்பார்கள். இதுவும் நடந்துவிட்டதே என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது கோலிவுட்.

ஆம். தற்போது அதே ஸ்ருதியுடன் சிவா ஜோடி சேரவிருக்கிறார் என்று ஸ்ருதியே தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி மீது கொந்தளிப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் கோபத்தை தணிக்கப்போவது யார் என்பதுதான் கேள்விக்குறி?

இந்த அதிர்ச்சியை, சிவகார்த்திகேயனுக்கு வீ ஆர் வித் யூ ப்ரோன்னு நின்னவங்களெல்லாம் தாங்கிக்கத்தான் வேணும்போல.