சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்.. இனி ‘ராஜ் விஷ்ணு’..!


சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்.. இனி ‘ராஜ் விஷ்ணு’..!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘ரஜினிமுருகன்’.

இமான் இசையமைத்திருந்த இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வருடத்தின் முதல் வெற்றியாக இப்படம் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விரைவில் கன்னட மொழியில் இப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சிவகார்த்திகேயன் கேரக்டரில் பிரபல கன்னட ஹீரோ ஷரன் நடிக்க, பழம்பெரும் கன்னட நடிகர் அம்பரீஷ், ராஜ்கிரண் கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்திற்கு ‘ராஜ் விஷ்ணு’ என்ற பெயரிடப்படவுள்ளதாக தெரிகிறது. மற்ற கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதால், விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.