3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.!


3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.!

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தன் நண்பர் ஆர்.டி.ராஜாவின் தயாரிப்பில் மூன்று படங்களில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா, ரவிக்குமார் மற்றும் பொன்ராம் ஆகியோர் இயக்கும் ஒவ்வொரு படங்களில் நடிக்கிறார்.

இதில் பொன்ராம் இயக்கவுள்ள படத்தில் ‘ரஜினி முருகன்’ டீம் அப்படியே இணையவுள்ளதாம்.

அதன்படி சிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக கீர்த்தி சுரேஷ் இணைவார் என சொல்லப்படுகிறது.