சிவகார்த்திகேயனை மிரட்டும் விநியோகஸ்தர்கள்..?


சிவகார்த்திகேயனை மிரட்டும் விநியோகஸ்தர்கள்..?

கடந்த மூன்று ஆண்டுகளில் பெயர் சொல்லும் படியான படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் யாரு கண்ணு பட்டுச்சோ? தற்போது பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார் சிவா.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரஜினி முருகன்’ படம் பல பிரச்சினைகளை சந்தித்து ஒருவழியாக டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன் அதாவது திரை மறைவில் பல போராட்டங்களை சந்தித்துள்ளதாம். இப்படத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய தொகை ரூ. 1 கோடி மட்டுமே. ஆனால் ‘ரஜினிமுருகன்’ வெளிவர வேண்டுமானால் அவர் ரூ. 5 கோடி தரவேண்டும் என்று மிரட்டினார்களாம்.

ஒருவேளை அவர் தராவிட்டால் இனி வெளியாகவுள்ள அவரது படங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி தருவோம் என்றும் கூறியிருக்கிறார்கள். பேச்சு வார்த்தை நடந்தபோது இரண்டு முக்கிய விநியோகஸ்தர்கள் தான் இதில் கறாராக இருந்ததாக கூறப்படுகிறது.

எல்லாம் ‘சிவா’ மயம்…. இனி என்ன நடக்க போகுதோ?