ரஞ்சித் இயக்கும் ரஜினி-நயன்தாரா படத்தின் டைட்டில் தேர்வு!


ரஞ்சித் இயக்கும் ரஜினி-நயன்தாரா படத்தின் டைட்டில் தேர்வு!

சூப்பர் ஸ்டார் ரஜினி பேசினாலும் பேசாவிட்டாலும் அவரை பற்றிய செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும். ‘லிங்கா’ பிரச்சினை பற்றி விவாதங்கள் நடைபெறும் போதே ரஜினியின் புதிய பட அறிவிப்பு அண்மையில் வெளியானது.

கடந்த மூன்று நாட்களாகவே ரஜினி படம் பற்றிய பேச்சுக்கள் மீடியாவை வலம் வருகிறது. கலைப்புலி தாணு தயாரிக்க ‘அட்டக்கத்தி’ புகழ் ரஞ்சித் இயக்குகிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ‘மெட்ராஸ்’ புகழ் முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை கபிலன், உமாதேவி, கானா பாலா ஆகியோர் எழுதுகின்றனர்.

இந்நிலையில் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் தெரிந்தும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் தெரியாமல் இருந்தது. ரஜினிக்கு இப்படத்தில் ஜோடி இல்லையென்று சொல்லப்பட்டாலும் நாயகி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அக்கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்களுடன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இளம் நடிகருடன் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

அவர் ரஞ்சித்தின் முதல் பட ஹீரோ அட்டக்கத்தி தினேஷ் என்று கூறப்படுகிறது. இப்படத்துக்கு டைட்டிலை தேர்வு செய்துவிட்டனர். ஆனால் பிரம்மாண்ட விழா நடத்தி தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்.