ரஜினிக்கு அடுத்து விஜய்; இவர்களுக்கு அடுத்துதான் கமல்?


ரஜினிக்கு அடுத்து விஜய்; இவர்களுக்கு அடுத்துதான் கமல்?

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்து ரசிகர் மன்றங்களையும் ரசிகர்களையும் அதிகம் கொண்டவர் இளையதளபதி விஜய். அதுபோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் விஜய்க்கு உள்ளனர். இந்நிலையில் மற்றொரு விஷயத்திலும் ரஜினியின் அடுத்த இடத்திற்கு நெருங்கி வருகிறாராம் விஜய்.

‘புலி’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இப்படத்தை தயாரிப்பவர் கலைப்புலி தாணு இவர் இதற்கு முன்பே ‘சச்சின்’, ‘துப்பாக்கி’ ஆகிய விஜய் படங்களை தயாரித்திருந்தார். தற்போது தயாரிக்கும் ‘விஜய் 59′ படத்திற்கு இதுவரை விஜய் வாங்காத சம்பளத்தை கொடுக்கவிருக்கிறாராம் தாணு. அதாவது விஜய்யின் சம்பளம் 30C என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

ரஞ்சித் இயக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்தையும் கலைப்புலி தாணுதான் தயாரிக்கிறார். விஜய்க்கே 30C என்றால் இந்தியளவில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிக்கு எவ்வளவு கொடுப்பார் என்ற பேச்சு தற்போதே கோலிவுட்டை வலம் வரத் தொடங்கிவிட்டது.

ரஜினிக்கு அடுத்து விஜய் என்றால் அப்போ கமலின் சம்பளம் இதற்கு அடுத்தா?