காஞ்சனா 2; லாரன்ஸின் நடிப்பை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!


காஞ்சனா 2; லாரன்ஸின் நடிப்பை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

சன் பிக்சர்ஸ் வழங்க ‘ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘காஞ்சனா-2’. இதற்கு முன்பு வெளியான இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் ‘முனி’, ‘காஞ்சனா’ படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. தற்போது ‘காஞ்சனா 2′ படத்திற்கு சென்சாரின் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படம் வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக டாப்சி நடித்திருக்கிறார். இவர்களுடன் கோவை சரளா, நித்யா மேனன், ஜாங்கிரி மதுமிதா, ரேணுகா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்

திகில் பட ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள இப்படத்தில் லாரன்ஸ் 70 வயது கிழவியாக நடித்துள்ள போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதுதவிர இப்படத்திலேயே 7 வயது சிறுவனாகவும் லாரன்ஸ் நடித்திருக்கிறாராம்.

அந்த வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் காட்சிகளை பார்த்த பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி லாரன்ஸை வெகுவாகப் பாராட்டினாராம். இது ஒரு முற்றிலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். இதில் நீ நடித்திருக்கிறாய். உனக்கு என்றும் அந்த ராகவேந்திரர் ஆசி உண்டு. அவரின் ஆசியினால் இப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றாராம் சூப்பர் ஸ்டார்.