இளையராஜா இசைஞானி; எம்எஸ்வி இசை சாமி – ரஜினி புகழாரம்


இளையராஜா இசைஞானி; எம்எஸ்வி இசை சாமி – ரஜினி புகழாரம்

மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் சமீபத்தில் காலமானார். அவரது மறைவையொட்டி புகழஞ்சலி செலுத்தும் விதமாக ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’ என்ற புகழஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார் இளையராஜா. இந்நிகழ்ச்சியில் ரஜினி உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது… ‘‘எம்.எஸ்.விஸ்வநாதன் இசையின் சாமி! இளையராஜா ஒரு இசைஞானி. அந்த சாமியை பற்றி ஞானிக்கு தெரியும். அவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு இளையராஜாதான் உணர்த்த வேண்டும். திறமை என்பது பெற்றவர்கள் கொடுப்பதல்ல. கடவுள் கொடுப்பது. அது ஒரு சரஸ்வதி கடாட்சம்! எம்.எஸ்.வி.க்கு அது கிடைத்துள்ளது.

பணம், பெயர், புகழ் போன்றவை வரும்போது கூடவே தலைகனம் வந்துவிடும். ஆனால் எம்.எஸ்.வி.யிடம் கடுகளவு கூட எவரும் கண்டதில்லை. எம்ஜிஆர், சிவாஜி கணேசன், பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்ற ஜாம்பவான்களின் புகழ் ஏணிக்கு எவ்வளவோ உதவியிருந்தாலும் ஒரு அணில் மாதிரி வாழ்ந்தவர் எம்.எஸ்.வி. அப்படியொரு மகானை நான் பார்த்தது இல்லை. இனி பார்ப்பேனா தெரியாது. அதனால்தான் இந்நிகழ்ச்சிக்கு வந்தேன். இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்’’ இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.