ரஜினி-ரஞ்சித் இணையும் புதுப்பட டைட்டில் இதுவா?


ரஜினி-ரஞ்சித் இணையும் புதுப்பட டைட்டில் இதுவா?

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய இரு படங்களை மட்டுமே இயக்கிய ரஞ்சித்துக்கு ரஜினியின் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பு அமைந்தது. தமிழ் சினிமாவே இந்த வாய்ப்பை ஆச்சரியத்துடன் பார்த்தது. இதுபற்றி பேசாத நாளேடுகள், இணையத்தளங்கள், சேனல்கள் இல்லை. சமூக வலைத்தளங்களிலும் இது பற்றிய பகிர்வே நிறைய இருந்து வருகிறது.

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட்டில் மலேசியாவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. படத்தின் நாயகி தேடும் படலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தலைப்பு குறித்தும் கேள்விகள் கோலிவுட்டை வலம் வர ஆரம்பித்து விட்டன.

சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற இயக்குனர்…”இப்படத்தில் ‘முள்ளும் மலரும்’ காளியை நீங்கள் பார்க்கலாம் என்று கூறியிருந்தார். மேலும் ரஞ்சித் இயக்கிய இதற்கு முந்தைய படமான ‘மெட்ராஸ்’ படத்தில் நாயகனின் பெயர் காளி என்றே இருந்தது. எனவே ‘காளி’ என்ற பெயரே படத்தின் தலைப்பாக இருக்க கூடுதல் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கடந்த 1980ஆம் ஆண்டு வெளியான ‘காளி’ படத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பாலான ரஜினி படங்களில் அவரது கேரக்டர் பெயரே படத்தின் பெயராக இருந்து வருகிறது. ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘சிவாஜி’, ‘படையப்பா’, ‘லிங்கா’ வரை அது தொடர்கிறது. எனவே இப்படத்தின் பெயரும் அப்படியே இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.