ரூ.200 கோடியில் ரஜினி-ஷங்கர்-விக்ரம் மெகா கூட்டணி!


ரூ.200 கோடியில் ரஜினி-ஷங்கர்-விக்ரம் மெகா கூட்டணி!

‘லிங்கா’ படம் வெளியாகி அதன் பிறகு வந்த பிரச்சினைகள் போராட்டங்கள் அனைத்தும் தாங்கள் அறிந்ததே. அப்படத்திற்கு பிறகு மௌனம் காத்து வந்த ரஜினி தற்போது அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது. விநியோகஸ்தர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும் ‘நான் யானை அல்ல குதிரை’ என்பதை மீண்டும் நிரூபிக்க தயாராகி வருகிறார் ரஜினி.

இதற்கு சரியான ஆள் ஷங்கர் என்பதால் மீண்டும் அவருடன் கைகோர்க்க தயாராகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஐ’ படத்தை தொடர்ந்து ஷங்கரின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்தது. இந்நிலையில் ரஜினி – ஷங்கர் வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர அதிக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறதாம். ரஜினி மற்றும் ஷங்கர் சம்பளம் நீங்கலாக இதுவரை ரூ. 200 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாம். இவர்களின் கூட்டணியில் விக்ரம் இணையலாம் என்பதும் ரஜினிக்கு அவர் வில்லனாக நடிக்கலாம் என்பதும் எக்ஸ்ட்ரா தகவல். விக்ரமுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.