சூட்டிங் ஸ்பாட்டை மாற்றும் ரஜினி, விக்ரம், கார்த்தி, சிம்பு..?


சூட்டிங் ஸ்பாட்டை மாற்றும் ரஜினி, விக்ரம், கார்த்தி, சிம்பு..?

வெயில் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் வீடுகளிலும் சிலர் ஏசி அலுவலங்களிலும் மூழ்கி கிடக்கின்றனர்.

இதே நிலைமைதான் சினிமா படப்பிடிப்புகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

எனவே, பாகுபலி 2 படப்பிடிப்புக்கு இரு வாரங்களுக்கு விடுமுறை விட்டு விட்டார் எஸ்எஸ் ராஜமௌலி.

மேலும், இன்று நடக்கவிருந்த விஷாலின் கத்தி சண்டை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் வெயில் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், விரைவில் 2.0 படப்பிடிப்புக்காக பொலிவியா நாட்டுக்கு செல்லவிருக்கின்றனர் ரஜினி படக்குழுவினர்.

அதுபோல், விக்ரம் நடித்து வரும் ‘இருமுகன்’ படப்பிடிப்பை காஷ்மீருக்கு மாற்றியுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து கார்த்தியின் காஷ்மோரா, சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களின் படப்பிடிப்பு தளங்களும் மாற்றப்பட இருக்கிறதாம்.

இல்லையென்றால், தற்காலிகமாக கோடை விடுமுறை அளிக்கலாமா? யோசித்து வருகிறார்களாம் படக்குழுவினர்.