‘என் கதவை திறக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை…’ பாலகுமாரன்.!


‘என் கதவை திறக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை…’ பாலகுமாரன்.!

எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும், அதில் முக்கியமான படம் பாட்ஷா.
இந்த படத்தை போலவே, படத்தின் டயலாக்குகளும் படுபிரபலம்.

இதில் இடம்பெற்ற நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, உள்ளே போ, உண்மைய சொன்னேன் என அனைத்தும் இன்றவிலும் ரசிகர்களால் உச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்த டயலாக்குகளுக்கு சொந்தக்காரர் ஷாட்சாட் எழுத்தாளர் பாலகுமாரன்தான்.

இந்நிலையில் சமீபத்தில் ரஜினியை சந்தித்தார் பாலகுமாரன். அச்சந்திப்பு பற்றி பாலகுமாரன் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளதாவது…

“மிகவும் நல்ல மனிதன் என்று பல நூறு முறை ஒரு மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தாத்தான் இருக்கும்.

வியாபார உக்தி, வாழ்வு தந்திரம் இவையனைத்தும் உண்டென்றாலும் இவையல்ல வாழ்க்கை என்பதும் அவருக்குத் தெளிவாய் புரிந்திருக்கிறது.

என் காது சற்று மந்தமாய் இருக்கிறது. இருந்தாலும் எங்களுடைய பதினைந்து நிமிடப் பேச்சில் அவரின் அன்பும் அக்கறையும் இருந்தன.

அவர் இருக்கும் இந்த உயரத்திற்கு வாசல் வரை வந்து என் இன்னோவா கதவை திறக்க வேண்டிய அவருக்கு அவசியமில்லை.

படியிறங்க கைத்தாங்கினார், வந்தார் திறந்தார். என் புத்தகங்களை கொடுத்தேன்” என்று பதிவிட்டுள்ளார் பாலகுமாரன்.