கிரிக்கெட் ஆடும் ரஜினி-கமல்… எட்டு அணிகள்.. எட்டு நடிகைகள்..!


கிரிக்கெட் ஆடும் ரஜினி-கமல்… எட்டு அணிகள்.. எட்டு நடிகைகள்..!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அடுத்த மாதம் ஏப்ரல் 17ஆம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது.

இதில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன், மம்மூட்டி, மோகன்லால் சிரஞ்சீவி, நாகார்ஜுனா ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த போட்டியில் சூர்யா, தனுஷ், ஜீவா, விஷால், ஆர்யா, விஷ்ணு உள்ளிட்ட நடிகர்கள் தலைமையில் எட்டு அணிகளாக விளையாட இருக்கிறார்களாம். ஒவ்வொரு அணிக்கும் 6 நடிகர்கள் என்று மொத்தம் 48 நடிகர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

ஒவ்வொரு அணிக்கும் ஒரு முன்னணி நடிகையை விளம்பரத் தூதுவராக நியமிக்க இருக்கிறார்கள். நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் தான் முன்னணியில் உள்ளதாம்.

மேலும் இந்த அணிகளுக்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களின் பெயர்களை சூட்டவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டியில் முதல் பந்தை ரஜினி வீசுவார் என்றும் கமல் பேட்டிங் செய்வார் என்றும் தெரிவித்துள்னர்.

ஆக மொத்தத்தில் இந்த ஸ்டார் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் ஆகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.