ரஜினி – பிரபு – பி.வாசு… மீண்டும் இணையும் மெகா கூட்டணி…!


ரஜினி – பிரபு – பி.வாசு… மீண்டும் இணையும் மெகா கூட்டணி…!

ரஜினிகாந்த் நடித்த ‘பணக்காரன்’, ‘மன்னன்’, ‘உழைப்பாளி’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ ஆகிய படங்களை இயக்கியவர் பி. வாசு. இதில் ‘உழைப்பாளி’ தவிர மற்ற படங்கள் வேறு மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை.

இந்நிலையில் சிவராஜ்குமார், வேதிகா பி.வாசுவின் மகன் சத்திவேல் உள்ளிட்டோர் நடிக்க, கன்னடத்தில் ‘சிவலிங்கா’ என்ற பேண்டஸி த்ரில்லர் படத்தை உருவாக்கி இருந்தார் வாசு.

இப்படம் கடந்த மாதம் பிப்ரவரியில் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது. எனவே, இப்படத்தை ரஜினியை வைத்து, தமிழில் ரீமேக் செய்யும் எண்ணத்தில் இருக்கிறாராம் வாசு.

‘கபாலி’ படத்தை முடித்துவிட்டு, ரஜினி தற்போது ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது டெல்லியிலுள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வருட இறுதிக்குள் ‘2.0’ படத்தை முடித்துவிட்டு பி.வாசுவின் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை சிவாஜி புரொடக்ஷன் சார்பாக பிரபு தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியின் மன்னன், சந்திரமுகி ஆகிய படங்களை பிரபு தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.