கேஎஸ் ரவிக்குமாரின் மகளை ஆசீர்வதித்த ரஜினிகாந்த்..!


கேஎஸ் ரவிக்குமாரின் மகளை ஆசீர்வதித்த ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல் ஆகியோருக்கு பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

இவரது இரண்டாவது மகள் மாளிகாவுக்கும் அர்ஜுன் கிருஷ்ணாவுக்கும் கடந்த ஏப்ரல் 30ந் தேதி திருமணம் நடந்தது.

இவர்களின் திருமண வரவேற்பில் கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ரஜினியும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஷங்கர் இயக்கிவரும் 2.ஓ படப்பிடிப்பில் ரஜினி தொடர்ந்து கலந்து கொண்டிருப்பதால், அவர் வரவில்லை.

இந்நிலையில் மணமக்களுக்கான விருந்து நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்த அவர் விருந்துண்டு மகிழ்ந்தார். பின்னர் மணமக்கள் ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.