ரசிகனுக்காக தன் வாழ்நாள் கொள்கையை மாற்றிய ரஜினி..!


ரசிகனுக்காக தன் வாழ்நாள் கொள்கையை மாற்றிய ரஜினி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ரஞ்சித் இயக்கும் ‘கபாலி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரஜினியை சந்தித்த அப்துல் மாலிக் தஸ்தாகீர் என்ற ஒரு ரசிகர் தன்னுடைய ஷோரூம் ஒன்றை திறந்து வைக்க ரஜினியை கேட்டுள்ளார். ரஜினியும் அவரது வேண்டுக்கோளுக்கிணங்க அந்த ஷோரூமை திறந்து வைத்துள்ளார்.

இதுவரை ரஜினி இதுபோன்ற எந்தவொரு விழாவிலும் கலந்து கொண்டதில்லை. அவர் திறந்து வைத்த முதல் ஷோரூம் இதுதான். அந்த ரசிகர்தான் ‘கபாலி’ படத்தின் மலேசியா உரிமையை பெற்றுள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.