‘ரஜினி ரசிகர்கள் என்னை கொன்னுடுவாங்க…’ வர்மா அடித்த பல்டி..!


‘ரஜினி ரசிகர்கள் என்னை கொன்னுடுவாங்க…’ வர்மா அடித்த பல்டி..!

சர்ச்சையின் மறுபக்கம் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா. டாப் ஹீரோக்களை பற்றி ஏதாவது ஒன்றைச் சொல்லிவிடுவார். பின்னர் எதிர்ப்பு வலுக்கவே, அதற்கான விளக்கத்தை கொடுப்பார்.

சமீபத்தில் இவர் ரஜினியின் அழகை பற்றியும் அவரது ரசிகர்களின் அறியாமை பற்றியும் கூறியிருந்தார். அதில்…

“நான் ரஜினியை பாராட்டுகிறேன் என்பதை கூட ரசிகர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. ரஜினி கூட சில சமயம் அவரையே அவர் கிண்டலாக பேசுபவர்தானே.

என்னுடைய ட்வீட்களை ரசிகர்கள் தவறாகப் புரிந்து கொள்வதைப் பார்த்தால், இவர்களுக்கு பவர்ஸ்டார் ரசிகர்களே பரவாயில்லை போலிருக்கிறது” என்றார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் மேலும் கொதிப்படைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையறிந்த வர்மா தற்போது பாசிட்டிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில்…

“நான் ரஜினியை பாராட்டியதை ரசிகர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. ரஜினியிடம் பெரிய அழகில்லை. சிக்ஸ்பேக் இல்லை. இவர் கடவுளுக்கு என்ன செய்தாரோ? கடவுள் அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்துள்ளார்.

அழகான ஒருவர் ஹீரோ ஆவது பெரிய காரியம் இல்லை. ஆனால், ரஜினி தனது தோற்றத்தைக் கொண்டே பெரிய ஸ்டார் ஆகிவிட்டார்” என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரஜினி படத்தை டைரக்ட் செய்வீர்களா எனவும் கேட்டுள்ளனர்.

“அவரது ரசிகர்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை. அதுவரை அவரது படத்தை டைரக்ட் செய்ய முடியாது. அப்படி டைரக்ட் செய்தால் ரஜினி ரசிகர்கள் என்னை கொன்னுடுவாங்க…” என்றார்.