ரஜினிக்கு 2 மில்லியன்; ச்சும்மா ட்விட்டரே அதிருமுல்ல!


ரஜினிக்கு 2 மில்லியன்; ச்சும்மா ட்விட்டரே அதிருமுல்ல!

ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி மட்டுமல்ல…. அவர் பெயரில், அவரைச் சார்ந்து எது வந்தாலும் அதற்கு ஏற்படும் மார்கெட் வேல்யூவே தனிதான். இது 30 வருடத்திற்கு மேலாக நடந்து வரும் ஓர் அற்புதமான நிகழ்வு. ‘தளபதி’ படம் வெளியான போது ‘தளபதி’ பெயரில் வெளிவந்த பொருட்கள் ஏராளம். அன்றுமுதல் இன்றைய ரஜினிமுருகன் வரை அது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிக அதிகளவில் பயன்படுத்தப்படும் பெயர்களில் ஒன்றாக ரஜினியின் பெயர் இருந்து வருகிறது. இவரது பெயரில் ஏராளமானோர் வலைத்தள பக்கங்களைத் திறந்து செயல்பட்டு வருகின்றனர்.  திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என அத்தனை பேரும் ட்விட்டர் வலைத் தளங்களில் இயங்கி வருகின்றனர். எனவே, கடந்த வருடம் 2014 மே முதல் வாரம் ட்விட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த்.

அப்போது “என் ரசிகர்களின் விருப்பத்திற்குகேற்ப அவர்களுக்காக ட்விட்டரில் இணைகிறேன்” என்று கூறியிருந்தார். அவர் இணைந்த உடனே ரஜினியைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டியது.

அவர் இணைந்து தற்போது ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தற்போது இவர் இரண்டு மில்லியன் பாலோயர்களை தொடவிருக்கிறார். எனவே இவரது ரசிகர்கள் இதனைக் கொண்டாடவிருக்கின்றனர். இதற்காக #TwoMillionForSuperstarRajini  என்ற ஹேஷ்டேகை உருவாக்கி வைத்து காத்திருக்கின்றனர்.

ரஜினி பேரை கேட்டாலே… ட்விட்டரே அதிருதுல்ல…!