‘வேந்தர் மூவீஸில் ரஜினி நடித்தே ஆகனும்’ – விநியோகஸ்தர்கள்.


‘வேந்தர் மூவீஸில் ரஜினி நடித்தே ஆகனும்’ – விநியோகஸ்தர்கள்.

லிங்கா படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் பண பரிவர்த்தனை போன்ற விவகாரங்களில் ரஜினி நேரிடையாக தலையிட வேண்டும். நஷ்டத்தை ஈடு கட்டவேண்டும் இல்லையெனில் ரஜினி படங்களுக்கு ரெட் கார்டு போடப்படும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாவது… “‘லிங்கா’ பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனில் ரஜினி அவர்கள் வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு கொடுத்த வாக்குறுதிப்படி ஒரு படம் நடித்தாக வேண்டும். அப்படி நடித்தால் மட்டுமே MG அடிப்படையில் படம் திரையிட்டவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இழப்பீடு கிடைக்கும்.

மேலும், ரஜினி தரப்பில் கொடுக்கப்பட்டநஷ்ட ஈடுதொகை ரூ.12.50கோடிதொகையை இடைத்தரகர்தலையீடு இன்றிஉடனடியாக பிரித்துகொடுக்கப்பட வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டனர்.

இப்பிரச்சினை குறித்து இதில் முக்கிய பங்குவகித்த மூவரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது…

திருப்பூர் சுப்பிரமணியம் :

“லிங்கா தயாரிப்பாளர் ரூ.6 கோடி மட்டும்தான் கொடுத்தார். பாக்கி பணத்தை தன் மகளின் திருமணத்திற்கு பிறகு தருகிறேன் என்று கூறியிருக்கிறார். பணம் வந்தவுடன் பிரித்து கொடுக்கப்படும். இதைவிடுத்து சிங்காரவேலன் வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.மேலும், தாணுவிடமிருந்து சிங்காரவேலன் பெற்ற ரூ. 35 லட்சம் பணத்தை பிரித்து கொடுக்கவில்லை. அந்த பணம் என்ன ஆனது?” என்றார்.

லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் :

“இப்பிரச்சினையில் ரஜினி தலையிட்டு தொகையை பெற்றுத் தரவேண்டும். இல்லையெனில் குறுகிய கால தயாரிப்பாக வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு ரஜினி ஒரு படம் பண்ண வேண்டும். அதுவும் இல்லையெனில் ரூ. 15 கோடி பணம் கொடுக்க வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு :

“பணம் பெற்ற கொண்ட சிங்காரவேலன் ஒரு விளம்பரப் ப்ரியர். விளம்பரத்திற்காக எதையாவது செய்து கொண்டு இருக்கிறார். அவர் பணம் பெற்றுக் கொண்டது முதல் பத்திரம் கையெழுத்து வரை என்னிடம் புகைப்படம் ஆதாரம் இருக்கிறது. (படத்தை காண்பித்தார்)

பணம் பெறாத ஏரியாவின் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் நேரிடையாக இணைந்து ஒன்றாக வந்தால் மீதம் பணத்தை கொடுக்க இருக்கிறோம். சினிமா விநியோகத்தில் அனுபவம் இல்லாதவர்களால் தமிழ் திரையுலக வியாபாரம் சீரழிந்து வருகிறது. இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்ட இருக்கிறோம்” என்றார்.