‘ரஜினிகாந்த் தலைவர் இல்லை’ – மோகன்லால் அதிரடி!


‘ரஜினிகாந்த் தலைவர் இல்லை’ – மோகன்லால் அதிரடி!

தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான மோகன்லால் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். கமலுடன் ‘உன்னைப் போல் ஒருவன்’, விஜய்யுடன் ‘ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் தன் இணையத்தள பக்கத்தில் இன்றைய சினிமா மற்றும் ரசிகர்களது ரசனை பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

அதில்… “நான் திரைத்துறையில் இருக்கிறேன். நான் சொல்லப்போவதும் திரைத்துறை சம்பந்தமானதுதான். ஆனால் இது உணர்வுபூர்வமானது. இந்தியாவில் நிறைய சினிமா கடவுள்கள் இருக்கிறார்கள். அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், தேவ் ஆனந்த், ராஜேஷ் கண்ணா, ஷம்பி கபூர் போன்றவர்கள் படங்களில் செய்வதை போலவே அவர்களது ரசிகர்கள் நிஜவாழ்வில் பிரதிபலிக்கின்றனர். இது எப்போதும் ஒரு தொடர்கதையாக நீள்கிறது. படத்தில் காண்பிக்கப்படுவது கற்பனை கதாபாத்திரங்களே. அவர்களை பின்பற்றுவதை விட்டுவிட்டு தேசிய தலைவர்களை பின்பற்றலாம்.

மகாத்மா காந்தி, ஆப்ரகாம் லிங்கன், ஸ்வாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதல் இன்றைய ஏபிஜே அப்துல்கலாம் வரை உள்ளிட்டோரை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளுங்கள். நடிகர்களை ரசிகர்கள் மதித்தால்போதும். கண்மூடித்தனமாக அவர்களை பிரதிபலிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.