விஜய்க்கு நோ சொன்னார் ரஜினி… ஜி.வி. பிரகாஷுக்கு எஸ் சொல்வாரா ஏ.ஆர். ரஹ்மான்..?


விஜய்க்கு நோ சொன்னார் ரஜினி… ஜி.வி. பிரகாஷுக்கு எஸ் சொல்வாரா ஏ.ஆர். ரஹ்மான்..?

விஜய்யின் படங்களை போல், அவரது பட பாடல்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும்.

இம்முறை தெறி பாடல்கள் அதைவிட அதிகமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது எனலாம். அதற்கு காரணம் இப்படம் ஜி.வி. பிரகாஷின் 50வது படமாகும்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 20ஆம் சென்னை, சத்யம் திரையரங்கில் மாலையில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன. ஆனால் தற்போது ரஜினி கலந்துகொள்ள மாட்டார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஷங்கர் இயக்கும் ‘2.O’ படப்பிடிப்பில் ரஜினி இடைவிடாது நடித்துக் கொண்டிருப்பதால் அவர் வரமாட்டார் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷுக்காக ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொள்வார் எனவும் கூறப்பட்டது. அவராவது எஸ் சொல்வாரா? என்பதை ஓரிரு நாட்கள் காத்திருந்து பார்ப்போம்…