அஜித் பிறந்த நாளுக்காக காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்..!


அஜித் பிறந்த நாளுக்காக காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்..!

கடந்த வாரம் கபாலி படத்திற்காக தன் டப்பிங்கை தொடங்கிய ரஜினிகாந்த், ஒரு வாரத்தில் தன் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்தார்.

எனவே, இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என தகவல்கள் பறந்தன. ஆனால் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கபாலி படத்தின் டீசர் மே மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள் என்பதால் கொண்டாட அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே நாளுக்காக இப்போது ரஜினி ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.