அமெரிக்காவில் மட்டுமல்ல அகில உலகிலும் ரஜினி சாதனை..!


அமெரிக்காவில் மட்டுமல்ல அகில உலகிலும் ரஜினி சாதனை..!

ரஜினிகாந்த் படத்தை ரஞ்சித் இயக்குகிறார் என்ற செய்தி வெளியானது முதலே கபாலி பீவர் தென்னிந்தியாவை தொற்றிக் கொண்டது.

பின்னர் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ரஜினி சென்றபோது இந்த பீவர் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.

தற்போது கபாலி படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால், இது இன்னும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் இப்படத்தின் உரிமை ரூ 8.5 கோடிக்குப் போனதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு பொது மேடையில் அறிவித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ. 30 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை எந்த படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆனது இல்லையாம். எனவே, அமெரிக்காவில் மட்டுமல்ல, அகில உலகளவிலும் கபாலி பெரும் சாதனை படைக்கும் என கோலிவுட்டில் சொல்லப்படுகிறது.