விஜய்யின் ‘புலி’யை பாராட்டும் ரஜினி


விஜய்யின் ‘புலி’யை பாராட்டும் ரஜினி

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி விஜய் நடித்த புலி‘  திரையரங்குகளில் பாய்ந்தது. வெளியான ஓரிரு நாட்களுக்கு இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ‘புலி’ படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் எடுத்துள்ள இந்த வித்தியாசமான பேண்டசி முயற்சியை முதலில் பாராட்டியவர் இயக்குனர் லிங்குசாமி. அவரைத் தொடர்ந்து விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஜீவா பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது…

“குடும்ப ஆடியன்ஸுக்கு மற்றும் குழந்தைகளுக்கான ஓர் அழகான படம். அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு ஃபேண்டஸி படம். வேறொரு உலகத்திற்கு விஜய்யும் சிம்புதேவனும் நம்மை அழைத்து சென்றுள்ளனர்” என்று ஜீவா கூறியுள்ளார்.

இந்நிலையில் ‘புலிபடத்தை பார்த்த ரஜினியும் பாராட்டியுள்ளார். அதில்… “விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. பிரம்மாண்ட செட்கள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் புதுமையான முயற்சி. ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதம். ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு தமிழ் படம்” என தன் பாராட்டை தெரிவித்துள்ளார்.

ரஜினியின் இந்தப் பாராட்டை எஸ்.கே.டி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.  ரசிகர்கள் மற்றும் வலைத்தளவாசிகளிடமிருந்து ‘புலி‘ க்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் ரஜினியின் பாராட்டு படக்குழுவினர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயம் ரவி மற்றும் இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.