இந்திய நாட்டின் 2வது உயரிய விருதை பெற்றார் ரஜினிகாந்த்..!


இந்திய நாட்டின் 2வது உயரிய விருதை பெற்றார் ரஜினிகாந்த்..!

நம் இந்திய தேசத்தின் மிக உயர்ந்த விருதாக பாரத ரத்னா விருது கருதப்படுகிறது.

இவ்விருதினை அன்னை தெரசா, நேரு, இந்திரா காந்தி, அம்பேத்கர், எம்ஜிஆர், ராஜீவ் காந்தி, அப்துல் கலாம், லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட சாதனையாளர்கள் இதுவரை பெற்றுள்ளனர்.

இரண்டாவது உயரிய விருதாக பத்மவிபூஷன் விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதினை நடிகர் ரஜினிகாந்த், இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் இருந்து பெற்றார்.

மேலும் புற்றுநோய் நிபுணர் டாக்டர்.வி.சாந்தாவும் பத்மவிபூஷன் விருதை பெற்றார்.

இவர்களுடன் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு பத்மபூஷன் விருதும், நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

ரஜினிகாந்த், கடந்த 2000ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை பெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.