அஜித்துக்கு சிபாரிசு செய்யும் ரஜினி…? ஓகே சொல்வாரா தல..?


அஜித்துக்கு சிபாரிசு செய்யும் ரஜினி…? ஓகே சொல்வாரா தல..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கபாலி படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனிடையில் பி.வாசு கன்னடத்தில் இயக்கிய சிவலிங்கா மாபெரும் ஹிட்டடித்தது. இதில் சிவராஜ்குமார், வேதிகா ஜோடியாக நடித்திருந்தனர்.

இதன் தமிழ் ரீமேக்கில் ரஜினியை நடிக்க வைக்க பி. வாசு முயன்று வருகிறார். ஆனால் தொடர்ந்து ரஜினி பிஸியாக இருப்பதால், அவர் அஜித்துக்கு சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.

சிவா இயக்கத்தில் தல 57 படத்தை தொடர்ந்து, விஷ்ணுவர்தன் இயக்கும் சரித்திர கால படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். இதன்பின்னர் உதயநிதி தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே, அஜித்தும் பிஸியாக இருப்பதால் அவர் ஓகே சொல்வாரா எனத் தெரியவில்லை.

இதற்கு முன்பே பி. வாசு இயக்கத்தில் பரமசிவம் படத்தில் அஜித் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.