‘தெறி’ பிரச்சினை கபாலிக்கு வரக்கூடாது… தாணுவிடம் ரஜினி கோரிக்கை..?


‘தெறி’ பிரச்சினை கபாலிக்கு வரக்கூடாது… தாணுவிடம் ரஜினி கோரிக்கை..?

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள படம் கபாலி.

கடந்த 2014ஆம் ஆண்டில் ரஜினியின் கோச்சடையான் மற்றும் லிங்கா இரு படங்கள் வெளியாகின.

இரண்டும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மேலும் படத்தின் வியாபாரத்திலும் பல பிரச்சினைகள் எழுந்தன.

இந்நிலையில் கபாலி படம் வருகிற ஜுலை 1ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கபாலி படத்தின் வியாபாரத்தை முறைப்படி கையாள வேண்டும் என்றும். எந்தவிதமான பிரச்சினையும் வரக்கூடாது என்று தயாரிப்பாளர் தாணுவிடம் ரஜினி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய உறுதியான தகவல் இல்லையென்றாலும், தாணு தயாரித்து விஜய் நடித்த தெறி செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகாமல் பிரச்சினை எழுந்தது.

எனவேதான், ரஜினி இப்படி கேட்டுக் கொண்டிருப்பாரோ என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.