மீண்டும் மீண்டும் தமிழக ரசிகர்களை ஏமாற்றும் ரஜினி..!


மீண்டும் மீண்டும் தமிழக ரசிகர்களை ஏமாற்றும் ரஜினி..!

நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தில் கபாலி டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டீசர் ரெடியாகவில்லை என்பதால் இதன் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.

இப்படம் மே மாத இறுதியில் அல்லது ஜீன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என ரஜினியே சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கபாலி படத்தின் பாடல்களை அடுத்த மே மாதம் வெளியிடவுள்ளனர். இதற்கான விழாவை மலேசியாவில் நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன் வெளியான ஷங்கரின் எந்திரன் பாடல்களையும் மலேசியாவில்தான் வெளியிட்டனர்.

தமிழகத்தில் பாடல்களை வெளியிட்டால் நேரில் சென்று காணலாம் என்று காத்திருந்த ரசிகர்களை இம்முறையும் ரஜினி ஏமாற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.