‘கபாலிக்காக’ மூன்றை மட்டும் தேர்வு செய்த ரஜினிகாந்த்!


‘கபாலிக்காக’ மூன்றை மட்டும் தேர்வு செய்த ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் சந்தோஷ் நாராயணன். ‘அட்டக்கத்தி’ படம் மூலம் இவரும் இயக்குனர் ரஞ்சித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். அந்தக் கூட்டணி தற்போது ‘கபாலி’ வரை தொடர்கிறது.

இதுநாள் வரை இளம் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தற்போது ரஜினி படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், 36 வயதினிலே, எனக்குள் ஒருவன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ‘கபாலி’க்கும் இசையமைக்கிறார். இது சூப்பர் ஸ்டார் படம் என்பதால் இம்முறை கூடுதல் கவனமெடுத்து இசையமைத்து வருகிறாராம்.

இந்நிலையில் ‘கபாலி’க்காக தயார் செய்து வைத்திருந்த டியூன்களை ரஜினியிடம் போட்டு காண்பித்துள்ளார். இவரின் டியூன்களை கேட்ட ரஜினி நன்றாக இருப்பதாக பாராட்டினாராம். அதன்பின்னர் அவர் மெட்டமைத்த ஐந்தில் மூன்றை மட்டும் தற்போத தேர்வு செய்து இருக்கிறார். தற்போது ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள மலாக்கா சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது.