மீண்டும் மலையாள ரீமேக்கில் ரஜினி… ஜோடி நயன்தாரா..?


மீண்டும் மலையாள ரீமேக்கில் ரஜினி… ஜோடி நயன்தாரா..?

ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் நடித்து முடித்துவிட்டார் ரஜினி. இதனையடுத்து ஷங்கர் இயக்கத்தில் ’2.ஓ’ படத்தில் நடித்து வருகிறார்.

இதன்பின்னர் பி.வாசு இயக்கத்தில் ’சிவலிங்கா’ படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. சிவராஜ்குமார் நடித்த இப்படத்தை நேற்று பார்த்த, ரஜினி மிகவும் பாராட்டியதாக தெரிய வந்துள்ளது.

இது ஒரு புறமிருக்க, கடந்த ஆண்டு மம்மூட்டி மற்றும் நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிப்பார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இதனை உறுதிபடுத்தும் விதமாக, இப்படத்தின் இயக்குனர் சித்திக் மலையாள பத்திரிகைக்கு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளாராம். இது உறுதியாகும் பட்சத்தில் நயன்தாராவே ரஜினியின் ஜோடியாக நடிப்பார் என்கிறார்கள்.

ஏற்கெனவே ‘மணிசித்ரதாழ்’ என்ற மலையாள ரீமேக்கான ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி நடித்து பெரும் ஹிட் கொடுத்தது நாம் அனைவரும் அறிந்ததே.