ரஜினி-அஜித்-விஜய்யால் களை கட்டப்போகும் தீபாவளி-பொங்கல்..!


ரஜினி-அஜித்-விஜய்யால் களை கட்டப்போகும் தீபாவளி-பொங்கல்..!

ஷங்கர் இயக்கும் ரஜினியின் 2.ஓ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு பொலிவியாவில் தொடங்கவுள்ளது.

லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

இப்படத்தை அடுத்த வருடம் தீபாவளி அன்று வெளியிட ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது பரதன் இயக்கும் விஜய் படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடவிருக்கின்றனர்.

அதுபோல் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்தையும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவிருப்பதாக சொல்லப்படுகிறது.