உதயநிதியை பாராட்டிய ‘மனிதன்’ ரஜினிகாந்த்..!


உதயநிதியை பாராட்டிய ‘மனிதன்’ ரஜினிகாந்த்..!

உதயதிதி தன் நடிப்புலக பயணத்தை தொடங்கிய பின், வேலை வெட்டியில்லால் ஊரையும் காதலியும் சுற்றுபவராக இருந்தார்.

ஆனால், சமீபத்தில் வெளியான மனிதன் படத்தில், ஒரு பொறுப்புள்ள வக்கீலாக நடித்து, ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

அஹ்மத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹன்சிகா, பிரகாஷ் ராஜ், ராதாரவி, விவேக் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் ரஜினியும் இப்படத்தைப் பார்த்துள்ளார். எனவே உதயநிதிக்கு தன் பாராட்டுக்களை நேரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி கூறியுள்ளதாவது…

”சூப்பர் ஸ்டார் மனிதன் திரைப்படத்தை பார்த்துவிட்டு எங்கள் குழுவுக்கு பாராட்டை தெரிவித்தார். அவரின் ரசிகன் என்ற முறையில் அவரின் பாராட்டு எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார்.

1987ஆ ம் ஆண்டும் இதே ‘மனிதன்’ என்ற பெயரில் ரஜினி படம் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.