ரஜினி பப்ளிசிட்டி இல்லாமல் செய்ய நினைத்ததை போட்டுடைத்த கராத்தே


ரஜினி பப்ளிசிட்டி இல்லாமல் செய்ய நினைத்ததை போட்டுடைத்த கராத்தே

சென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களை பருவ மழை பதம் பார்த்து வருகிறது. எனவே, இதுகுறித்து நண்பர்களுடன் தன் ஆதங்கத்தையும், வருத்தங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

மேலும் அண்மையில் மலேசியா சென்ற ‘கராத்தே’ தியாகராஜனிடமும் இதுபற்றி அவர் பேசியுள்ளார். ரஜினியுடனான சந்திப்பு குறித்து கராத்தே தியாகராஜன் கூறியதாவது…

“ரஜினி சார் எதையும் யோசிக்காமல் மனசுல பட்டதை பேசுபவர். ஒருமுறை ஜெயா டி.வி. நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு, அங்கே முதல்வர் ஜெயலலிதாவை வைச்சுக்கிட்டே கருணாநிதியை பாராட்டி பேசியவர் அவர். அதுபோன்ற துணிச்சல் அவர் ஒருவருக்கு மட்டுமே உண்டு.

அப்படிப்பட்ட ரஜினிக்கு தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே உண்டு. அரசியலில் இல்லாவிட்டாலும் மக்களின் நலனில் அக்கறை காட்டியே வருகிறார் அவர். இப்போதும் தமிழக வெள்ளம் குறித்து பல தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

’ரொம்ப கஷ்டம்ல…! ஓயாத மழை, டிராஃபிக், வெள்ளம்னு ஒவ்வொரு நிமிஷமும் பயங்கர கஷ்டம்ல. மக்களுக்கு ஏதாச்சும் செய்யணும். என்ன பண்ணலாம்னு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க. பப்ளிசிட்டியே இல்லாம அதை செஞ்சுரணும்’ என்று ரஜினி தன்னிடம் தெரிவித்தார்” என்றார் கராத்தே தியாகராஜன்.

அவர் பப்ளிசிட்டி இல்லாம செய்ய நினைச்சதை இப்படி பட்டவர்த்தனமா போட்டு உடைச்சிட்டீங்களே கராத்தே??!!