ஷங்கரின் ‘2.ஓ’ படத்தில் சிட்டி கேரக்டரில் ரஜினி இல்லையாமே..?


ஷங்கரின் ‘2.ஓ’ படத்தில் சிட்டி கேரக்டரில் ரஜினி இல்லையாமே..?

லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டாக தயாரிக்கும் 2.ஓ படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு இன்றுமுதல் சென்னையில் தொடங்குகிறது.

ஷங்கர் இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் அக்‌ஷய்குமார், எமிஜாக்சன், சுதன்ஷூ பாண்டே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதன் படப்பிடிப்புகாக ஒரு நாள் முன்னதாகவே சென்னை வந்திருக்கிறார் அக்‌ஷய்.

இந்நிலையில் இப்படத்தின் கேரக்டர்களில் சில மாற்றங்களை ஷங்கர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது எந்திரன் முதல் பாகத்தில் வசீகரன் மற்றும் சிட்டி என இரண்டு கேரக்டரிலும் ரஜினியே நடித்திருந்தார்.

ஆனால், இதில் சிட்டியாக அக்‌ஷய்குமார் நடிக்கிறாராம். வில்லனாக சுதன்ஷூ பாண்டே நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

சென்னை படப்பிடிப்பை முடித்தவுடன் மொரோக்கோ நாட்டிற்கு பறக்க இருக்கிறார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.