ரிலீஸாகிறதா ரஜினி முருகன்?? விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை??


ரிலீஸாகிறதா ரஜினி முருகன்?? விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை??

தனது சினிமா கேரியர் தொடங்கும் காலகட்டத்தில் இப்படி ஒரு பிரச்சனையை சந்திக்கப் போகிறோம் என சிவகார்த்திகேயனே நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

எதிர்பார்க்காததையெல்லாம் நிகழ்த்திக் காட்டுவதுதானே சினிமா??

அப்படியொரு ஒரு பிரச்சனை அதுவும் தன் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் மூலமே வரும் என அவர் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.. பாவம்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘ரஜினிமுருகன்’. படத்தை தயாரித்திருப்பவர் லிங்குசாமி. பலமுறை ரிலீஸுக்குத் தயாராகி மீண்டும் மீண்டும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது ர மு.

படத்தில் இடம்பெற்ற பாடலைப் போலவே ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…’ என்ற பாடலை தயாரிப்பாளரைப் பார்த்து சிவா பாடாத நாட்களே இல்லை என்னுமளவுக்கு நொந்து போய்விட்டார் மனிதர்.

சென்னை வெள்ளத்தில அடிச்சிட்டுப் போகும்போது ஆறுதலா ஒரு போட் வந்தா எப்படியோ அப்படியொரு நிகழ்வு அரங்கேற கேள்வி. படம் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்களிலிருந்து உறுதியான தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை வெளியிடக் கடந்த பல நாட்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தது.

நேற்று முன்தினம் தொடங்கி விடியவிடிய நடந்த பேச்சுவார்த்தைகளில் தீர்வு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்பே சொன்னபடி டிசம்பர் 4ஆம் தேதி படம் வெளியாக ஆக ஆயத்தங்கள் நடந்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.