கபாலி டீசர்… நொடிக்கு நொடி சாதனை… ‘நெருப்புடா’…!


கபாலி டீசர்… நொடிக்கு நொடி சாதனை… ‘நெருப்புடா’…!

இன்று காலை சொன்னது சொன்னப்படி ரஜினியின் கபாலி டீசர் ரிலீஸ் ஆனது. அந்த நொடி முதல் #KabaliTeaser என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

இன்று அஜித்தின் பிறந்தநாள் என்பதால், ரஜினி ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே பெரும் போராட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதையும் மீறி கபாலி டீசர் பெரும் சாதனை படைத்து வருகிறது. இது வெளியானது முதல் நொடிக்கு நொடி டீசர் படைத்த சாதனை பட்டியல் இதோ…

  • 13 நிமிடங்களில் 31,000 லைக்ஸ் பெற்றுள்ளது.
  • 22 நிமிடங்களில் 45,000 லைக்ஸ் பெற்றுள்ளது.
  • 25 நிமிடங்களில் 50,000 லைக்ஸ் பெற்றுள்ளது.
  • 30 நிமிடங்களில் 60,000 லைக்ஸ் பெற்றுள்ளது.
  • 50 நிமிடங்களில் 75,000 லைக்ஸ் பெற்றுள்ளது.
  • 57 நிமிடங்களில் 80,000 லைக்ஸ் பெற்றுள்ளது.
  • 60 நிமிடங்களில் 82,000 லைக்ஸ் பெற்றுள்ளது.
  • 1 மணி நேரம் 30 நிமிடங்களில் 1 லட்சத்திற்கும் மேல் லைக்ஸை பெற்று, இந்த சாதனை தொடர்கிறது.

தமிழ் பதிப்பின் டீசர் காலையில் வெளியாகிவிட்டாலும், இதன் தெலுங்கு பதிப்பின் டீசர் இன்று மாலை மிகச்சரியாக 6.02 மணிக்கு வெளியாகும் என கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.