அன்றும் இன்றும் ரஜினி… ‘முத்து’ முதல் ‘கபாலி’ வரை..!


அன்றும் இன்றும் ரஜினி… ‘முத்து’ முதல் ‘கபாலி’ வரை..!

கபாலி படத்தில் நடித்து முடித்து விட்டு சென்னை திரும்பி விட்டார் ரஜினி. ரஞ்சித் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்ட காலத்திற்கு முன்பே முடித்து கொடுத்து விட்டாராம் ரஜினி.

இந்த வயதிலும் ரஜினி சாரின் எனர்ஜிக்கு தங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்கிறார்கள் படக்குழுவினர்.

கபாலி சூட்டிங் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற போது ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது அவர்கள் மலாய் மொழியில் டப் செய்து வெளியிட வலியுறுத்தினார்களாம்.

எனவே, இப்படத்தை மலாய் மொழியில் டப் செய்து வெளியிடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ரஜினி, மீனா நடித்த ‘முத்து’ படம்தான் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட முதல் இந்திய படம். அதற்கு அடுத்து மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை ‘கபாலி’ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்று வரை ரஜினியின் சாதனைகளை அவரே முறியடித்து வருகிறார். கிரேட் தலைவா…