பர்ஸ்ட் லுக்கா…? அது மிஸ்டேக்கு…? பரபரப்பில் ராஜீவ் மேனன்..!


பர்ஸ்ட் லுக்கா…? அது மிஸ்டேக்கு…? பரபரப்பில் ராஜீவ் மேனன்..!

ராஜீவ் மேனன் இயக்கவுள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிக்க ‘பிரேமம்’ நாயகி சாய்பல்லவி தேர்வாகியிருக்கிறார்.

பெரும்பாலும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு அவரேதான் இசையமைப்பார். ஆனால் இப்படத்திற்கு அவரது தாய்மாமன் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படம் தொடர்பாக யாரோ ஒருவர் டிசைன் செய்த அழகான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் என்ற பெயருடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் ஜிவியுடன் ஜனனி ஐயர் இருக்கிறார்.

அது எங்களின் பர்ஸ்ட் லுக் இல்லை. யாரோ ஒருவர் செய்த மிஸ்டேக் என பரபரப்பான அறிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ராஜீவ்மேனன்.

இனிமே ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பே பர்ஸ்ட் லுக், தலைப்பு எல்லாம் வச்சிட்டா… இந்த பிரச்சினை இருக்காதே…