ஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..?


ஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..?

நடிகர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் ராஜீவ்மேனன்.

இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தின் தலைப்பை வெளியிட்டு உள்ளனர்.

இப்படத்திற்கு ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடல் ஒன்றின் ஆரம்ப வரிகள் ஆகும்.