சென்னை டூ கடலூர்… தொடரும் ரஜினியின் நிவாரண உதவி!


சென்னை டூ கடலூர்… தொடரும் ரஜினியின் நிவாரண உதவி!

கனமழை வெள்ளதால் தமிழகம் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த வேளையில் மனிதநேயம் உள்ள பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர்.

இதனிடையில் நடிகர் ரஜினிகாந்த் தன் சார்பாக ரூ. 10 லட்சத்தை நிவாரண நிதியாக நடிகர் சங்கத்திடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த மூன்று வார காலமாக நிவாரணப் பொருட்களை தொடர்ந்து அனுப்பி வருகிறார்.

சென்னை கோடம்பாகத்தில் உள்ள அவரது ராகவேந்திரா மண்டபத்திலிருந்து நிவாரணப் பொருட்களை ரசிகர் மன்றங்கள் மூலமாக அனுப்பி வருகிறார். சென்னை மட்டுமல்லாமல் கடலூர் மாவட்டத்திற்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ. 6 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், போர்வை, பாய், துணிமணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பிளீச்சிங் பவுடர், பினாயில் ஆகியவையும் கொடுக்கப்பட்டது. இதனை ரஜினிகாந்தின் நண்பர் திரு, சுதாகர் அவர்கள் பொறுப்பேற்று வழங்கி வருகிறார்.