தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு பாடம் சொல்லும் ‘ஜோக்கர்’


தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு பாடம் சொல்லும் ‘ஜோக்கர்’

அட்டக்கத்தி தினேஷ் மற்றும் மாளவிகா நடித்த ‘குக்கூ’ படத்தை இயக்கியவர் ராஜூமுருகன். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள புதுப்படத்திற்கு ‘ஜோக்கர்’ என பெயரிட்டுள்ளார்.

‘ஆரண்ய காண்டம்’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்த சோமசுந்தரம் இதில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் புதுமுகங்கள் காயத்ரி மற்றும் ரம்யா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கிய கேரக்டரில் எழுத்தாளர் மு.ராமசாமி, பவா செல்லதுரை, ச.பாலமுருகன் ஆகியோர் நடித்துள்ளனர். செழியன் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது…

“தமிழகத்தில் உள்ள பப்பிரெட்டிப்பட்டி என்கிற கிராமத்தில் இருக்கிற மன்னர் மன்னன்தான் படத்தின் நாயகன். ஆனால் இவருக்கு அரசியல்வாதிகள் என்றாலே பிடிக்காது.

ஓட்டுப் போட்டு எம்எல்ஏக்களை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களுக்கு அவர்களின் பதவியை பறிக்கும் உரிமை இருக்கிறது” என்பதை நகைச்சுவையுடம் கூறியிருக்கிறோம்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஏப்ரல் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.