நயன்தாரா இல்லனா ஸ்ருதி… ஸ்ருதி இல்லனா ராகுல் ப்ரீத்தி.!


நயன்தாரா இல்லனா ஸ்ருதி… ஸ்ருதி இல்லனா ராகுல் ப்ரீத்தி.!

ஜெயம் ராஜா, ரவி சகோதரர்களின் கூட்டணியில் மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘தனி ஒருவன்’. இப்படம் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது.

இதில் வில்லன் வேடத்தில் தமிழில் நடித்த அர்விந்த் சாமியே தொடர்கிறார். ஜெயம் ரவி வேடத்தில் ராம் சரண் நடிக்கவிருக்கிறார். இசை ஹிப்பாப் தமிழா.

நாயகி வேடத்தில் நயன்தாரா நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. அவரிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், பின்னர் ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்றும் தகவல்கள் வந்தன.

ஆனால் தற்போது ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என உறுதியாக தகவல்கள் வந்துள்ளன.

இதற்கு முன் ராம்சரண், ராகுல் ப்ரீத்தி சிங் இருவரும் இணைந்து ‘புரூஸ் லீ’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.