‘ரஜினி கடத்தல்; ரஜினி ரசிகன் நான்’ என்னதான் சொல்கிறார் ராம்கோபால்..?


‘ரஜினி கடத்தல்; ரஜினி ரசிகன் நான்’ என்னதான் சொல்கிறார் ராம்கோபால்..?

சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துபவர் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா.

இவர் சமீபத்தில் இயக்கிய கில்லிங் வீரப்பன் என்ற படம் கன்னடத்தில் வெளியானது.

தற்போது அப்படத்தை வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரில் டப் செய்து ஜூன் 3ஆம் தேதி தமிழில் வெளியிடவுள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சென்னையில் சந்தித்தபோது அவர் பேசியதாவது…

வீரப்பன் பற்றி பல படங்கள் வந்துவிட்டன. ஆனால் இதுவரை சொல்லப்படாத விஷயங்களை இப்படத்தில் கூறியிருக்கிறேன்.

இது தொடர்பாக நான் தகவல்களை தேடும்போது, கன்னட நடிகர் ராஜ்குமாரை அடுத்து ரஜினியை கடத்த வீரப்பன் திட்டமிட்டு இருந்ததாக அந்த பகுதி மக்கள் சொன்னார்கள்.

எனவேதான் அந்த கருத்தை ட்விட்டரில் பதிவு செய்தேன். இது படத்திற்கான பப்ளிசிட்டி இல்லை.

நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன். எனவேதான் தற்போது சென்னை வந்துள்ளேன்” என்றார்.