‘கமலால் ரஜினியாக முடியாது….’ – சர்ச்சையை கிளப்பிய ராம்கோபால்..!


‘கமலால் ரஜினியாக முடியாது….’ – சர்ச்சையை கிளப்பிய ராம்கோபால்..!

இந்தாளுக்கு வேற வேலையே இல்லையா? என்றுதான் நினைக்கத் தோன்றும். ராம் கோபால் வர்மாவின் கருத்துக்களை படிக்கும்போது.

ஒரு பிரபல இயக்குனரான இவர், ஏன் அடிக்கடி பிரபலங்களை வம்புக்கு இழுக்கிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மௌனமாகவே இருந்து வருகின்றனர்.

சில மாதங்களாக மம்மூட்டி, துல்கர், சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராஜமௌலி, பிரபாஸ் என மல்லுவுட், டோலிவுட் ஹீரோக்களை சீண்டி வந்த ராம் கோபால் வர்மா சில நாட்களாக ரஜினியை சீண்டினார்.

பின்னர் தான் ரஜினியை புகழ்ந்து கூறிய கருத்தை ரசிகர்கள் தவறாக எடுத்துக் கொண்டதாக ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ‘கமலால், ரஜினி இடத்தைப் பிடிக்க முடியாது’ என கமலை கிண்டல் செய்துள்ளார்.

இதனால், கமல் ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.