விஜய்க்கு ரஜினி வில்லன்… விக்ரமுக்கு அஜித் வில்லன்.. தனுஷுக்கு பாகுபலி வில்லனா?


விஜய்க்கு ரஜினி வில்லன்… விக்ரமுக்கு அஜித் வில்லன்.. தனுஷுக்கு பாகுபலி வில்லனா?

தெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

விஜய்க்கு வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கிறார். இவர் ரஜினியின் லிங்கா படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், திரு இயக்கத்தில் கருடா படத்தில் நடிக்கிறார் விக்ரம். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, வில்லனாக பாலிவுட்டின் பிரபல இயக்குனரும் நடிகருமான மகேஷ் மஞ்சுரேகர் நடிக்கிறார்.

இவர் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். தனுஷின் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

இதில் பாகுபலி வில்லன் ராணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் விஜய், விக்ரம், தனுஷ் ஆகிய மூவரும் பிரபல வில்லன்களுடன் மோத தயாராகி வருகின்றனர்.