தனுஷ்-கௌதம் கூட்டணியில் இணைந்த பாகுபலி கலைஞர்…!


தனுஷ்-கௌதம் கூட்டணியில் இணைந்த பாகுபலி கலைஞர்…!

பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு படம், துரை செந்தில்குமார் இயக்கத்தில் கொடி படம் என நடிகராக முடித்து கொடுத்துள்ளார் தனுஷ்,

இதனிடையே ரேவதி மற்றும் அமலா பால் நடித்துள்ள அம்மா கணக்கு என்ற படத்தை ஒரு தயாரிப்பாளராக முடித்து கொடுத்துள்ளார் தனுஷ்.

நேற்று முதல் கெளதம்மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தனுஷின் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் முக்கிய கேரக்டர் ஒன்றில் பாகுபலி புகழ் ராணா நடிக்கவிருக்கிறாராம்.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளது.