ராணாவுக்கு மொழி மறந்தாலும் பெண்கள் மறக்காது; ஸ்ரீதிவ்யா முன்பு ஆர்யா கிண்டல்


ராணாவுக்கு மொழி மறந்தாலும் பெண்கள் மறக்காது; ஸ்ரீதிவ்யா முன்பு ஆர்யா கிண்டல்

மலையாளத்தில் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ‘பெங்களூர் டேஸ்’. அஞ்சலி மேனன் எழுதி இயக்கியிருந்த இப்படத்தில் துல்கர் சல்மான்,  பஹத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா நஸீம், பார்வதிமேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்ய முன்வந்துள்ளது பிவிபி சினிமாஸ் நிறுவனம்.

தற்போது நாகார்ஜுனா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்க வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரம்மாண்டமான படத்தை தயாரித்து வருகிறது. இவைமட்டுமில்லாமல் அனுஷ்கா நடிப்பில் ‘இஞ்சி இடுப்பழகி’ (சைஸ் ஜீரோ) என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தங்களது 11 ஆவது தயாரிப்பாக இந்த ரீமேக் படத்தைத் தயாரிக்க உள்ளது. படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்க, இயக்குனர் பொம்மரீலு பாஸ்கர் இரண்டு மொழிகளிலும் இயக்கவுள்ளார். குகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆர்யா, பாபி சிம்ஹா, தெலுங்கு நடிகர் ராணா டக்குபட்டி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.  மலையாளத்தில் பஹத் பாசில் ஏற்ற வேடத்தில் தமிழில் ராணா நடிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

இப்படத்திற்கான பூஜை மற்றும் பிரஸ் மீட் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொள்ள சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படத்தின் கலைஞர்கள் படத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

தெலுங்கு நடிகர் ராணா பேசும்போது… “சென்னையை விட்டு சென்று வெகுநாட்களாகி விட்டது. தமிழ் மறந்து விட்டது. எனவே, ஆங்கிலத்தில் பேசவா? என்று கேட்டபோது அருகில் இருந்த ஆர்யா, ராணாவுக்கு மொழிமட்டும்தான் மறந்து விட்டது. ஆனால், பெண்களை மறக்க மாட்டார் என்று ஸ்ரீதிவ்யா முன்னிலையில் கிண்டலடித்தார்.

யார நினைச்சு ஆர்யா சொன்னாரோ தெரியலையேப்பா?