‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படப்பெயரை மாற்ற ரவிமரியா ஆலோசனை..!


‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படப்பெயரை மாற்ற ரவிமரியா ஆலோசனை..!

இயக்குனர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’.

இப்படத்தில் நிக்கி கல்ராணி, சூரி, ரவிமரியா, ரோபா சங்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சத்யா இசையமைக்க விஷ்ணு விஷால் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார்.

வருகிற ஜீன் 3ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று இப்படத்தின் கலைஞர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் ரவிமரியா பேசியதாவது….

“இயக்குனராக என்னால் பிரகாசிக்க முடியவில்லை. எனவே நடிகனாக பிரகாசிக்க முழு கவனம் செலுத்தி வருகிறேன்.

தொடர்ந்து எழில் அவரது படங்களில் வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவருடன் இது எனக்கு 3வது படம்.

இப்படத்திற்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற பெயர் வைத்ததற்கு பதிலாக இறங்கி அடிச்சா எப்படியிருக்கும்? என்ற தலைப்பு வைத்திருக்கலாம்.

அப்படி படம் முழுக்க காமெடியில் இறங்கி அடித்திருக்கிறார்கள். இப்படம் வெற்றி பெறவில்லை என்றால் நான் நடிப்பதையே நிறுத்தி விடுவேன். அந்தளவு படத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்” என்று பேசினார்.