அஜித்துடன் நடிக்க மறுத்த விஜய்சேதுபதி… ஏன்..?


அஜித்துடன் நடிக்க மறுத்த விஜய்சேதுபதி… ஏன்..?

சிவா இயக்கத்தில் தல 57 அஜித் நடிப்பது உறுதியாகி விட்டபோதிலும் படத்தில் நடிக்கவுள்ள கலைஞர்கள் யார்? யார்? என்ற கேள்விக்கு இதுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லை.

படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் மட்டுமே உறுதியாகியுள்ளனர்.

இப்படத்தில் ஒரு பவர்புல்லான வில்லன் ரோல் இருப்பதால், அதில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடும் என கூறப்பட்டது.

ஆனால் விஜய்சேதுபதி இதில் நடிக்கவில்லை என தற்போது உறுதியான தகவல்கள் வந்துள்ளன.

இதுகுறித்து மேலும் கிடைத்த தகவல்கள் கூறியதாவது…

தர்மதுரை, றெக்க படங்களை தொடர்ந்து கேவி ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

இதனால் தொடர்ந்து அவரது கால்ஷீட்டுக்கள் பிஸியாக இருப்பதால் அஜித்துடன் நடிப்பதற்கான வாய்ப்பே இல்லையாம்.